சமயபுரத்தில் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி
சமயபுரத்தில் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி நடைபெற்றது.;
சமயபுரம், ஆக.9-
சமயபுரத்தில் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி 2 நாட்கள் நடைபெற்றது. இதில் திருச்சி, நெல்லை, கோவை, கரூர், ஈரோடு, சேலம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 90 பெண்கள், 574 ஆண்கள் கலந்து கொண்டனர். சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், மாஸ்டர் ஆகிய பிரிவுகளின் பென்ச் பிரஸ் டேட் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டி முடிவில் ஆண்கள் பிரிவில் திருச்சி அணி அதிக அளவில் புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.பெண்கள் பிரிவில் நெல்லை அணி முதலிடம் பிடித்தது. திருப்பூரைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் ஸ்ட்ராங் வுமன் என்ற பட்டத்தை பெற்றார். தமிழ்நாடு வலுதூக்கும் சங்க மாநில தலைவர் ராமச்சந்திரன், மாநில செயலாளர் இளங்கோவன், திருச்சி மாவட்ட செயலாளர் விசுராஜன், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினர்.