பாரத ஸ்டேட் வங்கி கிளை திறப்பு விழா

பொதட்டூர் பேட்டையில் பாரத ஸ்டேட் வங்கி புதிய கிளை திறப்பு விழா நேற்று நடந்தது.;

Update:2023-03-05 19:45 IST

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர் பேட்டையில் பாரத ஸ்டேட் வங்கி புதிய கிளை திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன் தலைமை தாங்கினார். பாரத ஸ்டேட் வங்கி தலைமை பொதுமேலாளர் ஆர்.ராதாகிருஷ்ணா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய பாரத ஸ்டேட் வங்கியின் கிளையை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், தலைமை பொதுமேலாளர் ராதாகிருஷ்ணா பேசும்போது, 'பாரத ஸ்டேட் வங்கி மக்களுக்கு கடன் வழங்குவதில் முன்னோடியாக திகழ்கிறது. பொதுமக்களுக்கு எந்த வகையான கடன்களையும் தர வங்கி தயாராக உள்ளது' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் ராஜலட்சுமி, துணை பொதுமேலாளர் சபல்திரிபாடி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் ஆதூர்த்தி தினேஷ், பொதட்டூர்பேட்டை பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன், நகர பிரமுகர்கள் சக்கரப்பன், பக்தவச்சலம், மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் செல்வம் ஸ்டில்ஸ் உரிமையாளர் செல்வம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்