ஈரோட்டில் இன்று தொடங்குகிறது குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

இலவச பயிற்சி வகுப்பு;

Update:2022-12-13 01:00 IST

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 மற்றும் குரூப்-1 ஏ முதல்நிலை தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பயன்பெறும் வகையில் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் மூலமாக திறமையான ஆசிரியர்களை கொண்டு முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நடத்தப்பட உள்ளன.

எனவே முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இன்று காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்துக்கு நேரில் சென்று பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு vgerode@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ 95788 87714 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்