தூத்துக்குடியில் அஞ்சல் வார விழாவை முன்னிட்டு தபால்தலை கண்காட்சி

தூத்துக்குடியில் அஞ்சல் வார விழாவை முன்னிட்டு தபால்தலை கண்காட்சி நடைபெற்றது.

Update: 2023-10-12 18:45 GMT

இந்திய தபால் துறை சார்பில் தேசிய அஞ்சல் வார விழா கடந்த 9-ந்தேதி முதல் வருகிற அக்.15-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நேற்றுமுன்தினம் தபால் தலை சேகரிப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி தபால் கோட்டம் சார்பில் காமராஐ் கல்லூரி வளாகத்தில் தபால் தலை கண்காட்சி நடந்தது. தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பாளர் மு.பொன்னையா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக காமராஜ் கல்லூரி முதல்வர் பூங்கொடி கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார். மாவட்ட முப்படை வீரர் வாரிய முன்னாள் துணைத் தலைவர் கர்னல் சுந்தரம் 500-க்கு மேற்பட்ட தபால் தலைகள் மற்றும் உறைகளை கண்காட்சியில் வைத்திருந்தார். இந்த கண்காட்சியை கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் ஆர்வமாக பார்வையிட்டனர்.

மேலும் பள்ளிக் குழந்தைகளுக்கான தபால் தலை தொடர்பான வினாடி வினா போட்டியும் நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 11 பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தபால் ஆய்வாளர் சுப்பையா, வணிக நிர்வாக அலுவலர் பொன் ராம்குமார் ஆகியோர் வினாடி வினா போட்டி நடத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தபால் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா பரிசு வழங்கி பாராட்டினார்

நிகழ்ச்சியில் தபால் கோட்ட உதவி கண்காணிப்பாளர்கள் வசந்தா சிந்துதேவி, ஹேமாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி வரலாற்று துறை தலைவர் தேவராஜ் செய்து இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்