குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்

சூளேஸ்வரன்பட்டியில் குளம்போல் தேங்கி கழிவுநீர் நிற்கிறது.

Update: 2022-12-17 18:45 GMT


பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலு வலகம் அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ள 100 அடி ரோட்டில் சாக்கடை கால்வாய் குளம்போல் தேங்கி நிற்கிறது.

இதனால் பகல் நேரத்தில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் மழை பெய்தால் சாக்கடை நிரம்பி ரோட்டில் கழிவு நீர் ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் 100 அடி ரோட்டோரத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட இல்லை.

கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்