கரூரில் புத்தக கண்காட்சி அரங்குகளில் தேங்கிய மழைநீர் - மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
சேதமடைந்த புத்தகங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் கடந்த 19-ந்தேதி முதல் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு திடீரென பெய்த கனமழையால் புத்தக திருவிழாவின் அரங்குகளில் மழைநீர் புகுந்து சேரும் சகதியுமாக காணப்பட்டது.
இதையடுத்து அந்த இடங்கள் உடனடியாக கிராவல் மண் கொண்டு சரிசெய்யப்பட்டது. இந்த நிலையில் புத்தக கண்காட்சி அரங்குகளை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் பிரபுசங்கர், முதல் மூன்று அரங்குகளில் மட்டுமே மழைநீர் புகுந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் சேதமடைந்த புத்தகங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.