ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் விடுப்பு எடுத்து போராட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2022-11-25 00:30 IST

ஊரக வளர்ச்சித் துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடி, வாட்ஸ்அப் மற்றும் காணொளி காட்சி மூலமாக ஆய்வுகள், இரவு நேர ஆய்வுகள், காலம் கடந்த ஆய்வுகள் ஆகியவற்றை கைவிட வேண்டும். கணிணி ஆபரேட்டர்களுக்கு பணி உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறை அலுவலக சங்கத்தினர் நேற்று 2-வது நாளாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஒன்றிய ஆணையர்கள், ஒன்றிய பொறியாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டம் காரணமாக நேற்று 2-வது நாளாக அனைத்து பணிகளும் முடங்கின. அலுவலகமும் வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்