புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி
கூடலூர் புனித அந்தோணியார் கோவில் தேர் பவனி
அய்யம்பேட்டை:
அய்யம்பேட்டை அருகே கூடலூர் கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இக்கோவிலில் அலங்கார தேர் பவனி நடைப்பெற்றது. விழாவை முன்னிட்டு காணியிருப்பு பங்கு தந்தை ஜோசப் திருப்பலி நிறைவேற்றினார். இதையடுத்து பூக்களாலும், வண்ண மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட புனித அந்தோணியார் தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மெழுகு வர்த்தி ஏந்தி வழிபாடு செய்தனர்.