புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி

திருச்சாப்பூர் புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.;

Update:2023-05-23 00:11 IST

புனித அந்தோணியார் ஆலயம்

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், பொய்யாமணி ஊராட்சி திருச்சாப்பூரில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

முன்னதாக ஆலயத்தில் கூட்டுப்பாடல் திருப்பலியும், நவநாள் திருப்பலியும் அருட்தந்தைகள் தாமஸ் ஞானத்துரை, ஆர்பெர்ட் ஆகியோர் நடத்தினர். இதைதொடர்ந்து புனித அந்தோணியார், ஆரோக்கிய மாதா செபஸ்தியார் உருவம் தாங்கிய சிலைகளை பெரிய தேரில் வைத்து மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

தேர்பவனி

பின்னர் இரவு 8 மணி அளவில் புனித அந்தோணியார் ஆலயத்தில் இருந்து பேண்டு வாத்தியம் மற்றும் வாணவேடிக்கையுடன் தேர் பவனி புறப்பட்டு திருச்சாப்பூர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. பின்னர் தேர் மீண்டும் ஆலயத்திற்கு வந்தடைந்தது.

இதில் திரளான கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தேர்பவனில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை குளித்தலை போலீசார் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்