வரசித்தி விநாயகர் கோவிலில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம்
வரசித்தி விநாயகர் கோவிலில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு சீனிவாச பெருமாள் திருகல்யாண உற்சவ விழா நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கும், சீனிவாச பெருமாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு மாலை மாற்றுதல், சங்கல்பம், மாங்கல்ய தாரணம் உள்ளிட்டவை நடந்தது.
இதில் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்துக் கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.