தமிழகத்தில் இலங்கை அகதிகள் 100ஐ தாண்டியது...!
பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து வாழ வழிதேடி மேலும் 8 ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.;
சென்னை,
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக ராமேஸ்வரம் அருகே அரிச்சல் முனையில் ஒரு குழந்தை உள்பட 8 பேர் தஞ்சை அடைந்துள்ளனர்.பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து இதுவரை 96க்கும் மேற்பட்டோர் தமிழகம் வந்துள்ளனர்.
இலங்கையில் குழந்தைகளுக்கான பால் பவுடர், மருந்து பொருட்கள் கிடைக்கவில்லை என்று இலங்கை அகதிகள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். தமிழ்நாடு அகதி களாக வந்துள்ள எங்களை ஆதரிக்கும் என்ற முழு நம்பிக் கையில் தான் இங்கு வந்துள்ளோம் என கண்ணீருடன் கூறினார். இதுவரை இலங்கையிலிருந்து 103 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.