திருவாரூர் மாவட்ட விளையாட்டு வீரர்கள் பதிவு செய்யலாம்

முதல்- அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க திருவாரூர் மாவட்ட விளையாட்டு வீரர்கள் பதிவு செய்யலாம் என்று கலெக்்டர் கூறியுள்ளார்.

Update: 2023-01-12 19:00 GMT

திருவாரூர்;

முதல்- அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க திருவாரூர் மாவட்ட விளையாட்டு வீரர்கள் பதிவு செய்யலாம் என்று கலெக்்டர் கூறியுள்ளார்.

இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விளையாட்டு போட்டிகள்

திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்www.sdat.tn.gov.inஎன்ற இணைய முகவரில் வீரர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்யவேண்டும். பதிவு செய்த வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

17-ந் தேதி கடைசி நாள்

மேற்கண்ட இணையத்தில் பதிவு செய்ய வருகிற 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும். எனவே திருவாரூர் மாவட்ட விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டில் அதிகளவில் பங்கு பெறும் வகையில் அந்தந்த பிரிவுகளில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்