பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்

விழுப்புரம் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.

Update: 2023-10-17 18:45 GMT


பள்ளிக்கல்வித்துறை சார்பில் விழுப்புரம் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் விழுப்புரம் ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது. தடகள போட்டிகள், கையுந்து பந்து, எறிபந்து, பூப்பந்தாட்ட போட்டி, வளையபந்து, ஆக்கி, பீச் வாலிபால், வாள் சண்டை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்து வருகிறது. 14 வயது, 17 வயது, 19 வயதுக்குட்பட்டோர் என்று தனித்தனி பிரிவுகளாக நடந்து வரும் இப்போட்டியில் அரசு பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு விளையாடினர்.

இப்போட்டிகளை பள்ளி தாளாளர் பிரகாஷ், செயலாளர் ஜனார்த்தனன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். இப்போட்டிகள் வருகிற 27-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் 3 இடங்களை பெறும் மாணவ- மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். மேலும் போட்டிகளில் முதலிடம் பெறும் மாணவ- மாணவிகள், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்