இளையோர் மன்றங்களுக்கு இடையே விளையாட்டு போட்டிகள்
இளையோர் மன்றங்களுக்கு இடையே விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் பெரம்பலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் வட்டார அளவிலான இளையோர் மன்றங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் பெரம்பலூர், ஆலத்தூர் ஆகிய வட்டாரங்களில் இந்த மாதத்தில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. பெரம்பலூர் வட்டாரத்திலும், ஆலத்தூர் வட்டாரத்திலும் உள்ள நேரு யுவகேந்திராவுடன் இணைந்து செயல்பட்டு வருகிற இளைஞர் மற்றும் மகளிர் மன்ற அங்கத்தினர்களுக்கு குழுப்போட்டிகளான வாலிபால் (ஆண்கள்), கோ-கோ (பெண்கள்), இருபாலருக்கான தனிப்போட்டிகளான ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், இறகுப்பந்து, பந்து எறிதல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இளையோர் மன்றத்தில் உள்ளவர்கள் (15 வயதுக்கு மேல், 29 வயதுக்குள்) மேற்கண்ட விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வருகிற 14-ந் தேதிக்குள் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள பெரம்பலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா அலுவலகத்துக்கு நேரடியாகவோ அல்லது 04328-296213 என்ற தொலைபேசி எண், 9659546940, 7810982528, 9443707581 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று பெரம்பலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா இளைஞர் அலுவலர் கீர்த்தனா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.