முக்கூடல்:
பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப்படும் 2022-23 கல்வியாண்டிற்கான பாரதியார் தின குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் சேரன்மாதேவி வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் சொக்கலால் மேல்நிலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. முக்கூடல் பேரூராட்சி தலைவர் ராதா லட்சுமணன் கொடியேற்றினார். சொக்கலால் மேல்நிலைப்பபள்ளி தலைமையாசிரியர் கோமதிசங்கர் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார். விளையாட்டு போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) மதியரசு துவக்கி வைத்தார். முக்கூடல் பேரூராட்சி துணை தலைவர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். விளையாட்டு போட்டியில் மொத்தம் 28 பள்ளிகள் கலந்து கொண்டன. அதில் ஹோப் மெட்ரிகுலேஷன் பள்ளி முதலிடத்தையும், முக்கூடல் சொக்கலால் மேல்நிலைப்பள்ளி 2-வது இடத்தையும் பிடித்தது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு, சேரன்மாதேவி கல்வி மாவட்ட அலுவலர் ரெஜினி தலைமையேற்று, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் உடற்கல்வி ஆசிரியை வேணி நன்றி கூறினார்.