கோவை மாநகர போலீசாருக்கான விளையாட்டு போட்டி

கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது.

Update: 2022-07-24 16:30 GMT


கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது.

விளையாட்டு போட்டிகள்

கோவை மாநகர போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான விளையாட்டு போட்டி கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கயிறு இழுத்தல், ஓட்டப் பந்தயம், பந்து சேகரித்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், சாக்கு பை ஓட்டம், லக்கி கார்னர் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் ஜெய்மிதுன் முதலிடம், ரூபின் அபினவ் 2-ம் இடம், ரித்விக் 3-ம் இடம் பிடித்தனர். பந்துகள் சேகரித்தல் போட்டியில் ஜெய்மிதுன் முதலிடம், ஹனிஸ் 2-ம் இடம், ரினிஸ் குமார் 3-ம் இடம் பிடித்தனர். மாணவிகளுக்கான ஓட்டப் போட்டியில் ரேஸ்மா ஸ்ரீ, சகசியா ஸ்ரீ, கிருஷிகா ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.

பரிசுகள்

ஆண் போலீசாருக்கான 100 மீட்டர் தூர ஓட்டப்பந்தயத்தில் நித்யானந்தம் முதலிடம், பிரதாப் சிங் 2-ம் இடம், ராமன் 3-ம் இடம் பிடித்தனர். சாக்கு ஓட்டத்தில் தங்கமாரி, அசோக்குமார், முத்தமிழ் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். கயிறு இழுக்கும் போட்டியில் தவமுருகேசன், சிவக்குமார், மகேந்திரன், இளையராஜா, சங்கர், ஈஸ்வரன், பரமசிவன் ஆகியோர் கொண்ட அணி வெற்றி பெற்றது.

பெண் போலீசாருக்கான 100 மீட்டர் தூர ஓட்டப்பந்தயத்தில் செவ்வந்தி முதலிடம், பிரியா 2-ம் இடம், செல்வமணி 3-ம் இடம் பிடித்தனர். கயிறு இழுக்கும் போட்டியில் பிரவீணா, அமுதவள்ளி, கலைச்செல்வி, சுகந்தி, தனுரேகா, ரேவதி, ஜெபஷீலா, வீரலட்சுமி, செல்வி, மதிச்செல்வி கொண்ட அணி வெற்றி பெற்றது.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்