சென்னையில் அமலுக்கு வந்த வேகக்கட்டுப்பாடு: அபராத நடவடிக்கையில் இறங்கிய போக்குவரத்து போலீசார்!

சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு வேக வரம்பை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.;

Update:2023-11-04 13:26 IST

சென்னை,

சென்னையில் பெருநகரத்தில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வாகன ஓட்டிகளுக்கு வேக வரம்பை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.

அதன்படி, இலகுரக வாகனங்கள் அதிகபட்சமாக 60 கிலோமீட்டர் வேகத்திலும், கனரக வாகனங்கள் அதிகபட்சமாக 50 கிலோமீட்டர் வேகத்திலும் செல்ல வேண்டும். இரண்டு சக்கர வாகனங்கள் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்திலேயே செல்ல வேண்டும். ஆட்டோக்கள் 40 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க வேண்டும். குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகையான வாகனங்களும் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டுமென போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

அமலுக்கு வந்துள்ள வேகக்கட்டுப்பாடு விதிமுறையை கடைபிடிக்காமல் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்