சிறுபான்மை நல ஆணையம் சார்பில் பேச்சுப்போட்டி

நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் சிறுபான்மை நல ஆணையம் சார்பில் மாவட்ட அளவில் நடந்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் சான்றிதழ் வழங்கினார்.

Update: 2023-04-27 18:45 GMT


நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் சிறுபான்மை நல ஆணையம் சார்பில் மாவட்ட அளவில் நடந்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் சான்றிதழ் வழங்கினார்.

பேச்சுப்போட்டி

தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டிகள் நடைபெறும். மாவட்ட அளவில் முதல் 3 இடங்களில் தேர்வு பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அதன்படி இந்த ஆண்டிற்கான மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நாகையில் உள்ள ஜெயலலிதா மீன்வள பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். முன்னதாக தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் ஆணையம் உறுப்பினர் தமீம்அன்சாரி வரவேற்றார்.

சான்றிதழ்

இதில் தமிழ் மொழி பேச்சுப்போட்டியில் 57 மாணவ-மாணவிகளும், ஆங்கில மொழி பேச்சுப்போட்டியில் 38 மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜமுனாராணி, நாகூர் முஸ்லீம் ஜமாத் தலைவர் சாஹாமாலிம், நாகூர் தர்கா ஆலோசனைக்குழு தலைவர் செய்யதுமுஹம்மதுகலிபா மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்