பள்ளி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை போட்டி
பள்ளி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை போட்டி நடந்தது.
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நீடாமங்கலத்தில் ஒன்றிய அளவிலான அரசு பள்ளி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை போட்டிகள் நடந்தன. இதில் வட்டார கல்வி அலுவலர் சம்பத், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் ராஜாராம், ஜீவானந்தம், தர்மராஜ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் இளையராஜா, வேலுசாமி, ராதிகா மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதேபோல் குடவாசல் வட்டார கல்வி அலுவலகம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை, பாட்டு, கவிதை போட்டி நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் குமரேசன் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பூபாலன் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் போட்டிகளை நடத்தினர். இதில் வெற்றி பெற்றவர்களை தலைமை ஆசிரியர்கள் ச.ரவிச்சந்திரன், ஆ.ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்தினர்.