ஜல்லிக்கட்டில் படுகாயம் அடைந்த பார்வையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

மணிகண்டம் அருகே ஜல்லிக்கட்டில் படுகாயம் அடைந்த பார்வையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-25 19:37 GMT

மணிகண்டம் அருகே ஜல்லிக்கட்டில் படுகாயம் அடைந்த பார்வையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காளை முட்டி காயம்

மணிகண்டம் அருகே உள்ள பள்ளப்பட்டியில் கடந்த 21-ந் தேதி ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் காளைகள் முட்டியதில் 34 பேர் காயம் அடைந்தனர். ஜல்லிக்கட்டை பார்வையிட வந்த பள்ளப்பட்டியை சேர்ந்த சக்திவேல் (வயது 49) என்பவரது வயிற்றில் மாடு முட்டியதில் அவரது குடல் ஏற்றம் ஏற்பட்டு வயிறு வீங்கியது. திருச்சி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு இருந்த சக்திவேலுக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். இதனிடையே அவர் டாக்டர்களின் ஆலோசனை இல்லாமல் அவராகவே வீடு திரும்பினார்.

இந்த நிலையில் நேற்று மாலையில் சக்திவேலுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் வேதனை தாங்காமல் காட்டுப்பகுதிக்கு சென்று வருகிறேன் என்று சென்றவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை.

தற்கொலை

இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவரை தேடி சென்றபோது, காட்டு பகுதியில் ஒரு மாமரத்தில் கயிற்றில் தூக்கு மாட்டி பிணமாக தொங்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாடு முட்டியதில் காயம் அடைந்த சக்திவேல் வலி தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்ைத ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்