தேய்பிறை அஷ்டமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
தேய்பிறை அஷ்டமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.;
வேலாயுதம்பாளையம்,
தோட்டக்குறிச்சி சேங்கல் மலைஅடிவாரத்தில் பிரசித்தி பெற்ற சொர்ண பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
நொய்யல் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவன நாதர் கோவிலில் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதேபோல் வேலாயுதம்பாளையம், நொய்யல் பகுதிகளில் உள்ள பல்வேறு கோவில்களிலும் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.