தை கடைசி வெள்ளியையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

தை கடைசி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;

Update:2023-02-11 00:15 IST


சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே உள்ள பாண்டலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தை மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக துர்க்கை அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதேபோன்று பூட்டை மாரியம்மன் கோவில், பாண்டலம் பெரியநாயகி அம்மன், மகா நாட்டு மாரியம்மன், சங்கராபுரம் புற்றுமாரியம்மன் மற்றும் சங்கராபுரம் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் தை மாதம் கடைசி வெள்யை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்