விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.;

Update:2022-09-30 00:42 IST

நொய்யல் அருகே முத்தனூரில் உள்ள வருண கணபதி கோவிலில் புரட்டாசி மாத சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் புன்னம், கரைப்பாளையம், சேமங்கி, மரவாபாளையம், குறுக்குசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்