ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2022-12-24 18:32 GMT

உடையார்பாளையம்:

உடையார்பாளையத்தில் கீரைக்கார தெருவில் உள்ள சஞ்சீவிராயர் என்ற பக்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர், விநாயகர், அய்யப்பன் மற்றும் ராமர், லெட்சுமணன், சீதை உள்ளிட்ட சுவாமிகளின் வீதி உலா முக்கிய வீதிகள் வழியாக நடந்தது.

இதேபோல் வெள்ளாழ தெருவில் உள்ள பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் கருட கம்ப தெருவில் உள்ள கருடகம்ப ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வேலப்பன் செட்டி ஏரி அருகில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்