திருத்தளிநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு
திருப்பத்தூர் சிவகாமி சுமேத திருத்தளிநாதர் யோகபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் சிவகாமி சுமேத திருத்தளிநாதர் யோகபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக யோக பைரவர் சன்னதி முன்பு யாக வேள்வி செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் பூஜை செய்தனர். தொடர்ந்து ஏராளமான பெண்கள் வெண்பூசணி, தேங்காய், எலுமிச்சம் பழம், மண் விளக்கு உள்ளிட்டவைகளில் நெய் மற்றும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். தொடர்ந்து பகல் 12.30 மணியளவில் யோக பைரவருக்கு பால், சந்தனம், மஞ்சள், பன்னீர், தயிர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் யோகபைரவர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர்.