பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
வேளுக்குடி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.;
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே உள்ள, வேளுக்குடியில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக ஆஞ்சநேயருக்கு பால், தயிர், பன்னீர், தேன், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி, வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், சாத்தனூர், கிளியனூர் பெருமாள் கோவில்களிலும், பழையனூர் சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.