பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.;

Update:2023-04-02 00:08 IST

தோட்டக்குறிச்சியில் சேங்கல்மலை வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஏகாதசியை முன்னிட்டு சுவாமிக்கு மஞ்சள், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால், அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர் மற்றும் துளசியால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமியை பல்லக்கில் அமரவைத்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு துளசி தீர்த்தம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்