அமாவாசையை முன்னிட்டு பண்ணாரி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

அமாவாசையை முன்னிட்டு பண்ணாரி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

Update: 2023-09-14 22:41 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் அரசு விடுமுறை நாட்கள், திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்கள், முகூர்த்த நாட்களில் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகாவில் இருந்தும் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள்.

அதன்படி நேற்று அமாவாசை என்பதால் அதிகாலை 5 மணி முதலே ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசிக்க வரிசையில் காத்திருந்தார்கள். 6 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் வரிசையாகச் சென்று அம்மனை பயபக்தியுடன் வணங்கி விட்டு வெளியே வந்தார்கள். பின்னர் குண்டத்தில் இருக்கும் சாம்பலை எடுத்து நெற்றியில் திருநீராக பூசி கொண்டார்கள். மேலும் ஏராளமான பெண்கள் நேர்த்திக்கடனுக்காக உப்பு, மிளகும் கலந்த கலவையை கோவில் முன்பு தூவி அம்மனை வழங்கினார்கள். பல பெண்கள் விளக்குகளை ஏற்றியும் அம்மனை வழிபட்டனர். கோவில் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. சத்தியமங்கலத்தில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்