அமாவாசையையொட்டி ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள் தரிசனம்
அமாவாசையையொட்டி ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள் தரிசனம்;
ஆனைமலை
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோவில் உள்ளது. உப்பாற்றங்கரையில் சயன நிலையிலிருந்து மாசாணி அம்மன் அருள்பாலித்து வருகிறார். இந்தக் கோவிலில் நேற்று அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். பக்தர்களின் வசதிக்காக அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலையில் பக்தர்கள் முதல் கால பூஜையில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். மேலும் உச்சிபூஜை, சாயரட்ச பூஜை, தங்கமலர் அர்ச்சனை உள்ளிட்ட பூஜையில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நின்று அம்மனை வழிபட்டனர். கோவில் வளாகத்தில் நடைபெற்ற அன்னதானத்திலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஆனைமலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மதுரை, தேனி, கம்பம், திண்டுக்கல், பழனி, திருப்பூர், ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளில் இருந்து 80-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் விடிய விடிய இயக்கப்பட்டன. வெளியூர் மட்டும் பிற மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள், 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.