வர்த்தகரெட்டிபட்டியில் கால்நடை சிறப்பு மருத்துவமுகாம்
வர்த்தகரெட்டிபட்டியில் கால்நடை சிறப்பு மருத்துவமுகாம் நடந்தது.
சாயர்புரம்:
முடிவைத்தாேனந்தல் அரசு கால்நடை மருத்துவமனை வாழ்ந்து காட்டுவோம் திட்ட சமுதாய பண்ணை பள்ளி சார்பாக சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் வர்த்தகரெட்டிபட்டியில் நடைபெற்றது. முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சீவிராஜ் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் ஜான் சுபாஷ். முன்னிலை வகித்தார். மருத்துவ முகாமில் மருத்துவர்கள் ஆனந்தராஜ், பெரியசாமி, சந்திரா, ராஜேஸ்வரி ஆகியோர் தலைமையில் 1,044 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த முகாமில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் தாமோதரன், செயல் அலுவலர் சுந்தர்ராஜன், வட்டார பணியாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.