மதுரை-தாம்பரம் இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கம்

மதுரை-தாம்பரம் இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

Update: 2024-08-27 00:37 GMT

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயணிகள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மதுரை - தாம்பரம் இடையே இன்று (செவ்வாய்க்கிழமை) சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அந்த வகையில், மதுரையில் இருந்து இன்று இரவு 8.50 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06184) திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக நாளை (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்