தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட சிலைகளை மீட்க தனிக்குழு

தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட சிலைகளை மீட்க தனிக்குழு டி.ஜி.பி. சைலேந்திரபாபு நடவடிக்கை.

Update: 2022-09-13 18:51 GMT

சென்னை,

தமிழக கோவில்களில் இருந்து திருடி வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட விலை மதிப்பிட முடியாத சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்து வருகிறார்கள். கடத்திச் செல்லப்பட்ட சிலைகள் குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அந்த சிலைகளை துரிதமாக மீட்டு தமிழகம் கொண்டுவருவது தொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, ஐ.ஜி. தினகரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

அக்கூட்டத்தில், வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்டுக்கொண்டு வர தனிக்குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க முடிவுசெய்யப்பட்டது. உடனடியாக தனிக்குழுவும் அமைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்