சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் படுகாயம்

மோட்டார் சைக்கிள்கள் மோதல் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் படுகாயம்

Update: 2022-06-14 17:06 GMT

திண்டிவனம்

திண்டிவனம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரங்கநாதன்(வயது 49), ஹரிராமன்(43) ஆகியோர் நேற்று முன்தினம் திண்டிவனம்-மயிலம் சாலையில் உள்ள கடையில் டீ குடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் போலீ்ஸ் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த ரங்கநாதன், ஹரிராமன் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்