திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை

திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-06 18:50 GMT

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம், மூன்று வகைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதிகபட்சமாக 5 நபர்களுக்கு வழங்கப்படும். பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தில் 50 நபர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும். வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தில் 10 மாற்றுத்திறனாளிகள் உள்பட அதிகபட்சம் 100 நபர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

அவை தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகை (ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுகள் மட்டும்), பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், மற்றும் வெற்றியாளர்கள் மேம்பாட்டுத்திட் டம் ஆகும்.

மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகம் சார்பில் பங்கெடுத்து பதக்கங்கள் வென்றிருக்க வேண்டும்.இந்த திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் wwwsdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களை வருகி்ற 15-ந் தேதி மாலை 5 மணிவரை சமர்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, ஆடுகளம் தகவல் மையத்தை வேலை நாட்களில் காைல 10 மணிமுதல் மாலை 5 மணிவரை தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்