விழுப்புரம் நியூ சிட்டி ஹோண்டா ஷோரூமில் சிறப்பு விற்பனை
விழுப்புரம் நியூ சிட்டி ஹோண்டா ஷோரூமில் சிறப்பு விற்பனை நடந்து வருகிறது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நியூ சிட்டி ஹோண்டா இருசக்கர வாகனங்கள் விற்பனை ஹோரூமில் சிறப்பு விற்பனை மேளா தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறப்பு விற்பனை குறித்து நியூ சிட்டி ஹோண்டா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முகமது இக்பால் கூறுகையில், விழுப்புரம் ஷோரூம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர், எலவனாசூர்கோட்டை, கண்டமங்கலம் ஆகிய கிளைகளில் சிறப்பு விற்பனை மேளா தொடங்கி நடந்து வருகிறது. ஸ்ரீராம் சிட்டி பைனான்ஸ் மூலம் ரூ.2,999 செலுத்தி ஆக்டிவா 6 ஜி ஸ்கூட்டர் வாங்கலாம். மேளாவில் ஸ்கூட்டர் வாங்கும் அனைவருக்கும் எக்ஸ்ட்ரா பிட்டிங் தொகையில் ரூ.1000 தள்ளுபடி செய்வதோடு, 5 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும். மேலும் ஹோண்டா ஹெல்மெட், ஸ்கூட்டர் கவர், குடை, லஞ்ச் பேக் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சிறப்பு மேளா வருகிற 31-ந்தேதி வரை நடைபெறும். ஆகவே பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் குறைந்த முன்பணம் செலுத்தி ஸ்கூட்டரை வாங்கி செல்லலாம் என்றார்.