வெள்ளை மாளிகையில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி: அமெரிக்க வாழ் இந்தியர் விஜய் பிரபாகரை வரவேற்ற ஜோ பைடன்

Update:2024-06-06 22:14 IST

சென்னை,

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவருடைய மனைவி ஜில் பைடன் ஆகியோர் வெள்ளை மாளிகை முன்பு உள்ள புல்வெளியில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தனர்.இதில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பிராங்க் பலோன், அல்மா ஆடம்ஸ், ரோசா டி லாரோ, ஜோனதான் ஜாக்சன், பிராங்க் ஜெ.மிர்வன், ரோ கானா, தானேடர், டெலியா ரேமிரெஜ், பில் போஸ்டர், ராபின் கெல்லி, இஹான் ஓமர் உள்பட அமெரிக்க செனட்டர்கள், பிரதிநிதிகள் மற்றும் அவர்களுக்கு நெருங்கிய குடும்பத்தினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்க வாழ் இந்தியரான, சென்னையைச் சேர்ந்த சிகாகோ உலக தமிழ் இளைஞர் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் விஜய் ஜி.பிரபாகர், அவருடைய மனைவி சிந்தியா பிரபாகர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டாக்டர் விஜய் பிரபாகரையும், அவருடைய மனைவி சிந்தியாவையும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்றார். அப்போது அமெரிக்க பன்முக கலசார கமிஷனின் 13-வது ஆண்டு உலக விருதுகள் வழங்கும் விழாவை சிறப்பாக நடத்தி முடித்ததற்காக ஜோ பைடன், விஜய பிரபாகரை வாழ்த்தினார். இந்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட ஒரே இந்தியர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபரின் மரைன் இசைக்குழு மற்றும் அமெரிக்க கடற்படை இசைக்குழுவின் நிகழ்ச்சிகள் சிறப்பு விருந்தினர்கள் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. 

Tags:    

மேலும் செய்திகள்