பூலோகநாதர் கோவிலில் ஆனந்த கல்யாண நடராஜருக்கு சிறப்பு பூஜை

பூலோகநாதர் கோவிலில் ஆனந்த கல்யாண நடராஜருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2023-09-29 18:45 GMT

நெல்லிக்குப்பம், 

நெல்லிக்குப்பத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த பூலோகநாதர் கோவிலில் புரட்டாசி மாதம் சதுர்தசி அன்று நடராஜருக்கு அபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று சிவகாமி சுந்தரி அம்பாள் சமேத அனந்த கல்யாண நடராஜப்பெருமானுக்கு மஞ்சள் பொடி, அரிசி மாவு, எலுமிச்ைச பழம், இளநீர், தேன் பஞ்சாமிர்தம் மற்றும் சொர்ண, அபிஷேகம் கலசாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் குருக்கள் குமார், ஹரி பிரபோ ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்