கோவில்களில் சிறப்பு பூஜை
பவுர்ணமியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
கோத்தகிரி
கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோத்தகிரி சக்திமலை முருகன் கோவிலில் முருகன், விநாயகர், அம்மன், லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல் டானிங்டன் கருமாரி அம்மன் கோவில், கடைவீதி பண்ணாரி அம்மன் கோவில் உள்பட கோத்தகிரி பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆடி பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.