காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் மகா மாரியம்மன் கோவிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிேஷகம், மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பெண்கள் அம்மனுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், உள்ளிட்டவைகளை வைத்து சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.