மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; இன்று நடக்கிறது
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடக்கிறது.
அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தகுதியான மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்யவுள்ளனர். இதற்கு 5 முதல் 12-ம் வகுப்பு வரை தேர்ச்சி, தோல்வி கல்வி தகுதி ஆகும். 19 முதல் 40 வயது வரை வயது வரம்பு ஆகும். முகாமில் வேலை வாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம், தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் சுய விவர குறிப்புகளுடன் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04329-228641 என்ற தொலைபேசி எண்ணையும், 9499055914 என்ற செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம், என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.