மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை

மணிப்பூர் மாநிலத்திற்காக திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள புனித கத்தரீனம்மாள் ஆலயத்தில் நேற்று காலை மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Update: 2023-07-09 12:27 GMT

திருப்பூர்

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு வன்முறையாக வெடித்தது. இதில் பலர் உயிரிழந்ததுடன், வழிபாட்டு தலங்கள் சேதப்படுத்தப்பட்டு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்திற்காக திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள புனித கத்தரீனம்மாள் ஆலயத்தில் நேற்று காலை மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஆலய பங்குத்தந்தை அருள் ஜெபமாலை தலைமையில் நடைபெற்ற பிரார்த்தனையில், மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை நீங்கவும், அங்கு அமைதி நிலவ வேண்டியும் மற்றும் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காகவும் கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி சிறப்பு பிரார்த்தனை ஏறெடுத்தனர். இதில் பங்குதந்தைகள் யேசுதாஸ், ரொசோரியோ வினோத், உதவி பங்குதந்தை அருள் சந்தோஷ், பங்கு பேரவை துணைத்தலைவர் டோனி, செயலாளர் ஏகேஆர் வினோத், நிர்வாகிகள் பாபு ஆண்டனி, பெர்னார்டு, குணசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்