தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

தமிழ்புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-04-14 19:38 GMT

நெல்லிக்குப்பம், 

தமிழ் புத்தாண்டையொட்டி கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கடலூர், விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து தேவநாதசுவாமி, தாயார் உட்பிராகத்திலும் மற்றும் தேசிகர் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

நெல்லிக்குப்பம்

இதேபோல் நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவில், அய்யப்பன் கோவில், புவனாம்பிகை சமேத பூலோகநாதர் மற்றும் அலமேலு மங்கை தாயார் சமேத பிரசான வெங்கடாசலபதி கோவில்களில் சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேல்பட்டாம்பாக்கம் ஞான பார்வதி சமேத சிவலோகநாதர் கோவில்,

நெல்லிக்குப்பம் பாமா ருக்மணி சமேத வேணுகோபால் சாமி கோவில், கைலாசநாதர் கோவில், மேல்பட்டாம்பாக்கம் சிவசுப்பிரமணியர் கோவில், கீழ்பட்டாம்பாக்கம் முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது.

காட்டுமன்னார்கோவில்

காட்டுமன்னார்கோவிலில் உள்ள மழுப்பெறுத்த விநாயகர், ஞானவிநாயகர், அனந்தீஸ்வரர் கோவில், உடையார்குடி மாரியம்மன் கோவில், வீரநாராயணப்பெருமாள் கோவில், மேலகடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், திருநாரையூர் பொல்லா பிள்ளையார் கோவில், கொல்லிமலைக்கீழ் பாதி சிவலோகநாதர் சாமி கோவில், ஓமாம்புலியூர் வியாக்கரபுரீஸ்வரர் கோவில், லால்பேட்டை காசி விஸ்வநாதர் கோவில், கால்நாட்டாம்புலியூர் பதஞ்சலிஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

விருத்தாசலம்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விநாயகர், விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், பாலாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு திபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்