கோவில்களில் சிறப்பு பூஜை

கோவில்களில் சிறப்பு பூஜை

Update: 2023-01-01 11:59 GMT

உடுமலை,

உடுமலையில் உள்ள கோவில்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி நடந்த சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆங்கில புத்தாண்டு

உடுமலையில் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவிலில் நேற்று ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன.இதில் பக்தர்கள் கலந்துகொண்டு மாரியம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்குபிரசாதம் வழங்கப்பட்டது.

உடுமலையில் பிரசித்தி பெற்ற பிரசன்ன விநாயகர் கோவில், தளிசாலை குட்டை திடலில் உள்ள சித்திபுத்தி விநாயகர் கோவில், கல்பனா சாலையில் உள்ள காளியம்மன் கோவில், நேருவீதியில் உள்ள காமாட்சியம்மன் கோவில், தில்லை நகரில் உள்ள ரத்தினலிங்கேஸ்வரர் கோவில், ஷீரடி சத்யசாய்பாபா கோவில், போடிபட்டி முருகன்கோவில், தளிசாலையில் பள்ளபாளையம் அருகே செங்குளத்தின் கரைப்பகுதியில் அமைந்துள்ள உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும்சிறப்பு பூஜைகள் நடந்தன.

உடுமலை பெரியகடைவீதியில் உள்ள நவநீதகிருஷ்ணசாமி கோவிலில் பூமிநீளா நாயகி சமேத சீனிவாச பெருமாளுக்கு 16வகையான அபிஷேகங்கள் நடந்தது.சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.

வண்ண கோலங்கள்

பொதுமக்கள் வீடுகளின் வாசலில் பல வண்ணங்களில் பல்வேறு வகையான கோலங்களை வரைந்து புத்தாண்டை வரவேற்கும் வாசகங்களை எழுதியிருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்