கந்த சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

கந்த சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2022-10-25 18:58 GMT

கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமிக்கு கந்த சஷ்டியையொட்டி பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பாலசுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் நன்செய்புகழூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் சுவாமிக்கு சூரிய கிரகணம் காரணமாக மாலை 6 மணிக்கு மேல் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்