அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
கோத்தகிரி
கோத்தகிரி கடைவீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் வைகாசி மாத அமாவாசை நாளான நேற்று காலை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் கோத்தகிரி கடைவீதியில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில் மற்றும் டானிங்டன் கருமாரியம்மன் கோவில்களிலும் அமாவாசை நாளையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.