வாராகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
வாராகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று கரூர் பிரம்மதீர்த்தம் சாலையில் உள்ள வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி வாராகி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வாராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.