விழுப்புரம் முருகன் கோவிலில் சிறப்பு பூஜை

கிருத்திகையை முன்னிட்டு விழுப்புரம் முருகன் கோவிலில் சிறப்பு பூஜை

Update: 2023-04-22 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அரசு மருத்துவமனை அருகில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு நேற்று காலை 6.30 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் சாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு காலை 10 மணியளவில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்