வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மக உற்சவம் கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம், மாசி மக தீர்த்தவாரி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வீதிஉலாவும் நடைபெற்று வந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று விடையாற்றி உற்சவம் நடந்தது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், விழா குழுவினர்கள், உபயதாரர்கள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.