திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.;

Update:2022-09-11 23:19 IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் நடைபெறும் விழாக்கள் சிறப்பு வாய்ந்ததாகும். ஆவணி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் விரதம் இருந்து கோவிலில் வழிபாடு நடத்துவது உண்டு. மேலும் அன்றைய தினம் சிறப்பு பூஜை கோவிலில் நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டு ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன்படி ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். மேலும் பெண்கள் பலர் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். பக்தர்கள் பலர் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க, ஒழுங்குப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு பணியில் திருக்கோகர்ணம் போலீசார் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்