ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
உலக நன்மை வேண்டி ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
திருக்கடையூர்:
திருக்கடையூர் அருகே ஆக்கூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வாள் நெடுங்கண்ணி அம்மன் உடனாகிய தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. சோழ மன்னர்களில் ஒருவரும் 63 நாயன்மார்களில் ஒருவரான கோச்சங்கட் சோழ மன்னரால் அமைக்கப்பட்ட மாட கோவில்களில் ஒன்றான இந்த கோவில் சுவாமி தானாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் கோவிலில் 63 நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் உலக நன்மை வேண்டி நவாவரண சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. தான்தோன்றீஸ்வரர், நெடுங்கண்ணி அம்மன் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.